தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
பொட்டுக்கடலை ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய இந்த உணவில், மிக மிக குறைந்த அளவு கலோரிகளே உள்ளது.
இதில் புரோட்டீன்கள் மட்டுமல்லாது, வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் ஆஅகியவை நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்குமே இந்த பொட்டுக்கடலை தரும் நன்மைகள் என எவையென நாம் இங்கு பார்ப்போம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
குறைந்த கலோரியும் நிறைந்த புரோட்டீனும் கொண்ட உணவாக உள்ளதால், ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே, வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால், பசி எடுக்காது. செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் பொட்டுக்கடலை, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, (Health Tips) இதயத்தையும் பாதுகாக்கிறது. இதிலுள்ள பாஸ்பரஸ் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கால்சியம் நிறைந்த பொட்டுக்கடலை எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற குறைபாடுகளை தடுக்கவும் இந்த பொட்டுக்கடலை உதவுகிறது. 40 வயதிற்கு பிறகு கால்சியம் குறைபாடு ஏற்படுவது இயல்பு. அதிலும், பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால், பொட்டுக்கடலையை தவறாமல் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்
மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள், ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால், ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். மாத விடாய தொடர்பான பிற பிரச்சனைகளுக்கும் பொட்டுக்கடலை தீர்வைத் தரும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். தினமும், சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் வயிற்று பிரச்சனைகளும் நெருங்காது.
முதுமை நெருங்காமல் இருக்க உதவும்
முகத்திற்கு அழகும் பொலிவும் தரும் ஆற்றல் கொண்டது பொட்டுக்கடலை. படை, சொறி, அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். தலைமுடி ஆரோக்கியாமாகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால், பொட்டுக்கடலையை தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். இளநரை பிரச்சனையும் நீங்கவும் பொட்டுக்கடலை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். எனவே, முதுமை நெருங்காமல் இருக்க உதவும் பொட்டுக்கடலையை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.