நாடாளுமன்றத்தில் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மன்னார் பட்டாரி பெண்ணின் மரணம்!
பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ் விடயத்தை சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி இன்றைய தினம் (08-08-2024) நாடாளுமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்தப் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன,
பெண்ணின் சிகிச்சையில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணைக்குழு தமது விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
இது தொடர்பான தங்களது அறிக்கையைக் குறித்த சுயாதீன விசாரணைக் குழு, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் நேற்று கையளித்திருந்தது.
அது மேலதிக நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பெண், குருதி போக்கு காரணமாக கடந்த 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று மன்னார் பொது வைத்தியசாலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.