ஐக்கிய ராஜ்யத்தில் புதிய வரலாறை எழுதிய மன்னார் நலன்புரிச் சங்கம் (Photos)
ஐக்கிய ராஜ்யத்தில் புதிய வரலாறை எழுதிய மன்னார் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவில் கடந்த 08.05 2023 அன்று மன்னார் நலன்புரி சங்கம் (UK) அமைப்பினரால் இடம்பெற்ற மாபெரும் விளையாட்டு திருவிழா நிகழ்வு நடாத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு . அன்று மோரிஷன் (இலங்கை தேசிய அணியின் முகாமையாளர்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வின் போது ஐக்கிய ராஜ்ய கொடியை, அடுத்து மன்னார் மாவட்டத்திற்கான கொடியும் பிரித்தானிய மண்ணில் ஏற்றி வைக்கப்பட்டு மன்னார் மண்ணின் புகழ் புலத்திலும் பரப்பப்பட்டது.
மதிப்பளிக்கும் நிகழ்வு
இதன்போது மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முன்பு எமது நாட்டில் வசித்த வேளையில் மாவட்டத்தின் புகழை பரப்ப நடைபெற்ற விளையாட்டுகளில் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பங்கு பெற்று இருந்த புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் வீர வீராங்கனைகளை கௌரவித்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் தற்போது மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்றிருக்கும் மன்னார் மாவட்டத்தின் இரண்டு வீரர்களும் ஐக்கிய ராஜ்யத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விளையாட்டு நிகழ்வில் உதை பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் (மென்பந்து) வலைப்பந்தாட்டம் ,சிறுவர்களுக்கான நிகழ்வு போன்ற நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது .
இதில் ஒன்பது வயது பிரிவு தொடக்கம் 50 வயது பிரிவு வரை பல பிரிவுகளை கொண்ட அணிக்கு ஏழு பேரை கொண்ட உதைப்பந்தாட்டமும், அதேபோன்று எனைய விளையாட்டு நிகழ்வுகளும் பிரித்தானியா மட்டுமல்ல பிரித்தானியாவை அண்டிய நாடுகளிலும் வசிக்கக் கூடிய மன்னார் மாவட்டத்தை சார்ந்த புலம்பெயர் உறவுகள் பங்கு பெற்றிருந்தார்கள் .










