மன்னார் வைத்தியசாலை போராட்டம்... வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை!
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் தாய் மற்றும் குழந்தையின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று (20-11-2024) மாலை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள், டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பொது வைத்தியசாலையின் சீசிரிவி கமராக்கள் மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.