மன்னம்பிட்டியில் விபத்துகுள்ளான பேருந்து தொடர்பில் அதிர்ச்சித்தகவல்!
நேற்றையதினம் இரவு (9) பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேசமயம் விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே பயணி ஒருவர் முகநூலில் பதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.