தமிழ் தேசிய விரோத சக்திகளுடன் கைகோர்க்கும் மணிவண்ணன் குழு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள நல்லூரை கைப்பற்ற, தமிழ் தேசியத்திற்கு எதிரான தரப்புக்களுடன் மணிவண்ணன் தரப்பு அங்கும் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாநகரசபை தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு மற்றும் ஈ.பி.டி.பி தரப்பின் பின்னணியில் களமிறங்கியதை போலவே, நல்லூரிலும் வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் தீவிர பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டனர்
இதற்காக ஈ.பி.டி.பி மற்றும் சு.க, சுயேட்சைக்குழுவுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்ட போது, அவரை ஆதரித்த பலர், தற்போது அவர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.பி.டி.பி பின்னணியில் இயங்குபவர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.