ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை
ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார்.
ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அதேவேளை ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் படையினர் பலரும் கூலிப்படைகளாக ரஸ்ய படைகளுடன் இணைந்துள்ள நிலையில் இதுவரை 59பேர் உயிரிழந்துள்ளனர்.