புத்தளத்தில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!
புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மாட்டிறைச்சிக் கடைகளில் நிர்ணய விலைகளுக்கு அதிகமாக மாட்டிறைச்சியை விற்பனை செய்தால் அதுதொட்டர்பில் தனக்கு தெரியப்படுத்துமாறு புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தளம் நகர பிதாவினால் கடந்த வருடம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட மக்களுக்கான சலுகைகள் மற்றும் மானியங்கள் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் புத்தளம் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் தனி மாட்டிறைச்சி நிர்ணயவிலையான 1000 ரூபாவாகவும், கலவன் ஈரல் 1200 ரூபாவாகவும் விற்கப்பட வேண்டும்.
அதைவிடுத்து எவரேனும் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை மீறி அதிகரித்த விலையில் விற்பனை செய்வார்களாயின் அதுதொடர்பில் தனக்கோ அல்லது நகரசபை நிர்வாகத்தினருக்கோ தெரியப்படுத்துமாரும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் , நடப்பு வருடத்திற்கு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல சலுகைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் புத்தளம் நகர பிதா எம்.எஸ்எம்.ரபீக் மேலும் தெரிவித்தார்.