இலங்கையை உலுக்கிய கோர விபத்து: சாரதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் நேற்றைய தினம் (09-07-2023) விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியை இன்றைய தினம் (10-07-2023) பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, மன்னம்பிட்டி பள்ளத்தில் கவிழந்து விபத்திற்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.