யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம்(21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை
வழமையாக பாடசாலை விடுமுறை நாட்களில் தேர்த்திருவிழா இடம்பெறும் எனவும், எவ்வாறாயினும் இம்முறை பாடசாலை நாளொன்றில் திருவிழா இடம்பெறுகின்றது.
இதன்காரணமாக யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை இன்று(20) சந்தித்து நாளைய தினம் விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதனை ஏற்ற பிரதமர் நாளையதினம் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனினும், விடுமுறை வேண்டும் என அதிபர்கள் கோரும் பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறையை வழங்க வடக்கு கல்வித் திணைக்களங்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும், எவ்வாறாயினும் இது சிக்கல் நிலையை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் ஒரு முறை கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து விடயத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எமது செய்திப் பிரிவுக்கு அறிவித்தார்.