மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் சுட்டுக்கொலை
மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைகாட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் இந்தியா - வங்காள தேசம் எல்லை பகுதியில் அமைந்திருக்கிறது.
இந்த பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி தனது தாத்தா, பாட்டியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கலாசார நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
அப்போது அவளுக்கு செல்போன் அழைப்பு வந்தது. உடனே அந்த சிறுமி அங்கிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் மாணவியின் வீட்டார் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு வீட்டின் அருகே சற்று தொலைவில் மாணவியின் உடல் மீட்கபப்ட்டது. மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். மாணவியின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.
மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் கூறினர். இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த வழக்கை விசாரிக்க, அப்பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மாணவிக்கு நன்கு அறிமுகமான ஷிமுல் பூரை சேர்ந்த பிரகலாத் தாஸ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தின்பேரில் பிரகலாத் தாசை கைது செய்தனர்.
விசாரணையில் மாணவியின் தாயை பற்றி பேசியது தொடர்பாக மாணவிக்கும், பிரகலாத் தாசுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.