யாழில் புலனாய்வாளர்களின் கூட்டாளிகள் இளைஞன் மீது கொடூர தாக்குதல் ; இருவர் மருத்துவமனையில்!
யாழ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது போதையில் நின்று நடனமாடிய காவாலிக் குழு ஒன்று வீதியால் சென்ற இளைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த இளைஞனின் ஆடைகள் களையப்பட்டு கொலை செய்யும் நோக்கோடு இத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
புலனாய்வாளர்களின் கூட்டாளிகள்
தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயற்சித்த மட்டக்களப்பு பிரதேச இளைஞனும் தாக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் தெல்லிப்பழை ஆதாரத் வைத்திய சாலையிலும் மற்றவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களை யாழ் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த பிரபல ரவுடியின் மகனும் அவரின் இரண்டு மருமக்களும் இன்னும் சில ரவுடிகளுமே தாக்கியுள்ளார்கள்.
இவர்கள் புலனாய்வாளர்களுடன் நெருங்கிப் பழகி வருபவர்கள் என்பதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போது ஜே.வி.பி கட்சியுடன் நெருங்கிச் செயற்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தவர்கள் என கூறப்படும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாருமே கைதுசெய்ய படவில்லை என கூறப்படுகின்ற்து.