எரிபொருள் தட்டுப்பாடு ; பாதிவழிதான் வரலாம்; அருச்சுனா எம்பி நாடாளுமன்றில் ஆதங்கம்!
வெளிமாவட்டங்களில் இருந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வரும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவதற்கு தமக்கு வெறும் 15 லீற்றர் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் தங்கியிருந்து கொழும்புக்கு வர வேண்டிய நிலை
"இந்த எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு, நான் இடையில் அனுராதபுரத்தில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த வாரமே கொழும்புக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்" என அருச்சுனா எம்பி சுட்டிக்காட்டினார்.
அதிரடியான பதிலடி; இப்படி திருப்பி அடிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை; ஈரான் இராணுவத்தை மெச்சும் டிரம்ப் !
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இந்த விடயம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் கிடைத்தவுடன் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் நாளை(18) கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.