குவைத்தில் வங்கி காவலாளியை கத்தியால் குத்திய நபர்: பதைபதைக்கும் காட்சிகள்!
குவைத்தில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியை கத்தியால் குத்திவிட்டு நபர் ஒருவர் பணத்தை கொள்ளை அடிக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குவைத்தின் Jahra அடுத்த Taima பகுதியிலுள்ள Burgan வங்கியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வங்கிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கியில் நுழைந்து துப்பாக்கி முனையில் 32 ஆயிரம் தினார்கள் வரையில் திருடிய பின்னர் வங்கியின் காவலாளியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது.

இது தொடர்பான அவசரகால கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்து நிலையில் விரைந்து வந்த அதிகாரிகள் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் புகுந்த குற்றவாளியான 31-வயது நபரை சுற்றிவளைத்து கைது செய்யதனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

