5 பெண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது
இந்தியா ஒடிசா மாநிலத்தில் 5 பெண்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருமணம்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தை தொடர்ந்து பொலிஸார் குறித்தி நபரை கைது செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பெண் பொலிஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை பொலிஸார் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை பொலிஸார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை பொலிஸார் முடக்கியுள்ளனர்.
அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பொலிஸாரின் விசாரணை
ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை. இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.
பொலிஸாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.
அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.