இலங்கையில் வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த அசம்பாவிதம்
ஹிக்கடுவை - வேவல பகுதியில் உள்ள கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (19) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சிகிச்சை பலனின்றி பலி
உயிரிழந்தவர் 54 வயதான, பெலாருஸ் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஹிக்கடுவை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.