அழுங்கு பிடிக்க குகைக்குள் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
அழுங்கு (எறும்புதின்னி) பிடிப்பதற்காக குகைக்குள் சென்ற ஒருவர், பாறை சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். பதுளை - கொஸ்லந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊவா மாவெலகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் அழுங்கை பிடிக்கும் நோக்கில் குகைக்குள் சென்றபோது, குகைக்கு மேலே இருந்த பாரிய பாறை அவர் மீது சரிந்து வீழ்ந்ததில், அவர் குகைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.

கொஸ்லந்த, தியஹிதிதென்ன வனப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிற்குள் விலங்கு ஒன்றினை வேட்டையாடுவதற்காகச் சென்ற 30 வயதுடைய நபர் ஒருவர், குகைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் (1) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கொஸ்லந்த, தியஹிதிதென்ன - உவமாவெலகம பகுதியைச் சேர்ந்த ஆர். ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.