வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு... சந்தேகத்தில் குடும்பத்தினர்!
வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதியொருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
முல்லை – முள்ளியவளை பகுதியினை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதான மணிவேல்ப்பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளிவளை பொலிஸாரால் கடந்த 16.10.24 அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் 23.10.24 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அப்போதும் உறவினர்கள் பார்வையிட்டுள்ளார்கள், அதன் பின்னர் 06.11.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வவுனியா சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட போது அவர் நன்றாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி பிள்ளைகள் அறிந்து அங்கு சென்று பார்வையிட்டபோது அவர் பேச்சு அற்ற நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனையின் தீவிரச சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், கைதியினை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது எந்த தகவலும் பொலிஸாரால் வீட்டுக்காரர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் முள்ளியவளை பொலிஸாரே ஏற்கனவே குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா சிறைச்சாலை பொலிஸார் குற்றம்சாட்டிய நிலையில், முள்ளியவளை பொலிஸார் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை விட தீவிர சிகிச்சைப்பிரிவில் உறவினர்கள் மருத்துவரிடம் விசாரித்த போது அவரது மூளை சாவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக மூளைவாவடைந்த நிலையில் குறித்த கைதி நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பம் நீதி கோட்டு வவுனியாவில் உள்ள மனித உரிமைகள்ஆணைக்குழுவிடம் கடந்த 13 ஆம் திகதி சென்றபோது அவர்கள் 18ஆம் திகதி திங்கட்கிழமை முறைப்பாடு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையில் குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.
இந்த கைதியின் உயிரிழப்பு தொடர்பில் மனைவி, பிள்ளைகள் சிறைச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இவரின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.