கதிர்காம மரத்தில் ஏறி நபர் அட்டகாசம்
கதிர்காமம் தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி அட்டகாசம் செய்த நபரொருவர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் - கெபெல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கதிர்காமம் தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இரு பஸ்களின் சாவிகளை தன்னிடம் தருமாறி கூறியுள்ளார்.

பின்னர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து மரத்தில் ஏறிய நபரை மீட்டபோது குறித்த நபர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.