போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவி கைது!
சட்டவிரோதமாக சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவி மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான மனைவி மொரட்டுவை - மொரட்டுவெல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் பெயரில் சொத்து
கைதுசெய்யப்பட்டவரின் கணவன் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமமாக பணம் சம்பாதித்துள்ள நிலையில் மனைவியின் பெயரில் சொத்து சேகரித்து வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான மனைவி மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் கடந்த 22 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து டிசம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.