பேருந்தில் பெண் அருகில் வயோதிபரின் மோசமான செயல் ; காட்டிக்கொடுத்த CCTV
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த 3/1 இலக்கத்தைக் கொண்ட 'NB -6101' பேருந்தில், பயணிகளின் பைகளைக் வெட்டிப் பொருள்களைத் திருட முயன்ற வயதான நபர் குறித்த காணொளி மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் அவிசாவளை 3/1 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்தில், இடம்பெற்றுள்ளது.

பாதி வழியில் இறங்க்கு ஓட்டம்
சலாவ சந்தியில் ஏறிய வயதான நபர் ஒருவர், சலாவ இராணுவ முகாம் அருகில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவரின் பையைக் கத்தி அல்லது கூரான ஆயுதத்தால் வெட்டி, அதனுள்ளிருந்த பணப்பையைத் திருட முயன்றுள்ளார்.
எனினும், இச்சம்பவத்தைக் கவனித்த சக பயணிகள் உடனடியாக உஷாரடைந்ததை அடுத்து, கையும் களவுமாக மாட்டிக்கொள்வதை உணர்ந்த அந்த நபர், பேருந்து நின்றவுடன் அங்கிருந்து இறங்கித் தப்பியோடியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இக்காணொளியில் உள்ள நபரை அடையாளம் கண்டுகொண்டாலோ அல்லது அவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்திருந்தாலோ உடனடியாகத் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேசமயம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்களது உடமைகளின் பாதுகாப்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், இது போன்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும் சமூக வலைதளப் பதிவுகள் எச்சரித்துள்ளன