கரூரில் அவனை முடித்திருந்தால்....அன்பில் மகேஷ் கைதில் வெடித்த சர்ச்சை!
100 கோடி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
தமிழ் நாட்டின் தனியார் பாடசாலை நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் 100 கோடி பண மோசடி செய்ததாக அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கரூரிலேயே அவனை முடித்திருந்தால் இப்படி நடந்திருக்குமா தலைவரே?
இன்னிலையில் அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது ஆதரவாளர்களில் ஒருவர், “கரூரிலேயே அவனை முடித்திருந்தால் இப்படி நடந்திருக்குமா தலைவரே?” எனக் கூச்சலிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமார், கரூர் சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க.வினருக்குத் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்
. இதற்கிடையில், கரூரில் இடம்பெற்ற சம்பவத்தில் 41 பேர் இலக்காக இருக்கவில்லை என்றும், முதலமைச்சர் விஜய்யே இலக்காக இருந்ததாகவும் கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் கரூரில் அவனை முடித்திருந்தால் என புழல் சிறைவாசல் பகுதியில் மிரட்டும் வகையில் பேசிய வேலூர் மாநகராட்சி 12வது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.