நகர்ந்து செல்லும் அர்னாப்' புயல் ; இலங்கையில் தாக்கம் குறையும்
வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய பகுதியில் நிலவும் 'அர்னாப்' எனும் மிகத் தீவிர சூறாவளி, இந்தியக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையின் தாக்கம் நாளை (28) முதல் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது மழை
இன்று (27) முற்பகல் 11.30 மணியளவில், 'அர்னாப்' சூறாவளி காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 820 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
இது வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்தின் ஊடாக இந்தியக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்இ நாளை மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்