மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை அடித்துக் கொன்ற கணவர்
கற்பிட்டி, தெத்தப்பொல பகுதியில் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 49 வயதுடைய கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை
இச்சம்பவத்தில் கரம்பை, பாலாவி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வடிவேல் செந்தூர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் நீர் நிரம்பிய பள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் வீக்கங்கள் காரணமாக சந்தேகமடைந்த பொலிஸார், இது கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, கரம்பை, பாலாவி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மரக்கட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலத்தின்படி, தனது மனைவிக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தகாத தொடர்பு இருந்ததாகக் கூறி, கடந்த 19.10.2026 திங்கட்கிழமை அதிகாலை 2 மணி முதல் 2.30 மணிக்குள் குறித்த நபரைத் தாக்கியுள்ளார்.
பின்னர், அவரை சுமார் 12 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று நீர் நிரம்பிய பள்ளத்தில் தள்ளியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நொச்சியாகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் டி.ஜி.எம்.பி. விமலசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.