யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் அதிரடி கைது ; கடைக்குள் காத்திருந்த ட்விஸ்ட்
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 07 மோட்டார் சைக்கிளை யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியை அண்மித்த பகுதியில், மர விற்பனை நடாத்தும் நபர் ஒருவரின் விற்பனை நிலையத்தினுள் , அதீத திறன் (CC) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நிற்பதாக மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு , சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , அதனுள் இருந்து 07 அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றினர்.
அவற்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு எவ்வித பதிவுகளும் இல்லாத நிலையில் , ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் போலி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து 07 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றிய பொலிஸார் , அவற்றை உடைமையில் வைத்திருந்த நபரையும் கைது செய்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடொன்றில் இருந்து திரும்பி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.