சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிலேனியம் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது, எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; CCTVயில் காத்திருந்த அதிர்ச்சி
மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர்களினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் ஈடுபட்டு வருகின்றது.