களுத்துறையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றையதினம் (20-07-2024) அத்துருகிரிய நகரில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, மணியம்கம, அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவியதற்காக குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
இதேவேளை, இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.