யாழிலிருந்து கண்டி சென்ற பஸ்ஸில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர்!
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த 2 பல்கலைக்கழக தமிழ் மாணவிகளிடம் மோசமாக நபந்த நபர் தொடர்பான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவுப் பயணத்தின் போது தனது விரல்களை ஆசனங்களுக்கு அருகில் கொணர்ந்து குறித்த பல்கலைக்கழக மாணவிகளுடன் மோசமாக நடந்துகொண்டுள்ளார்.
இடையில் குறித்த மாணவிகள் எழுந்து அவரை எச்சரித்த போதும் ஏனையவர்களுக்கு கூறிய போதும் நடத்துனர் உட்பட பேருந்தில் பயணித்த எவரும் எந்த சம்பவம் தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என குறித்த மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர் எனவும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.