கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ரூ.11.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க பிஸ்கட்டுகளின் எடை 1 கிலோகிராம் 2.66 கிராம் என்று கூறப்படுகிறது. துபாயிலிருந்து வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட நபர் சிலாபத்தை வசிக்கும் 58 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை சுங்க அதிகாரிகளுக்கு செலுத்திவிட்டு திரும்பி வரும் போது, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.