வழக்கு விசாரணையின் போது நீதவான் மீது லேசர் கற்றை வீசியவருக்கு நேர்ந்த கதி!
கொழும்பு - கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார வழக்கு ஒன்றை நடத்தும் போது நீதவான் மீது லேசர் கற்றை வீசியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கோட்டே கொடுபம்மா வீதியில் வசிக்கும் துணை வகுப்பு ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவெல நீதவான் நீதிமன்ற பதிவாளர் கடுவலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தை சோதனையிட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
எனினும் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, சந்தேக நபரை மனநல வைத்தியரிடம் சிகிச்சைகளைப்பெற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு கடுவெல பொலிஸார் சார்பில் ஆஜரான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட வைத்திய நிபுணர் ஒருவரால் பரிசோதித்து உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.