விமான நிலையத்தில் ஆணும் பெண்ணும் கைது
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 366 கிராம் குஷ் போதைப்பொருளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆணொருவரும் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடை பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஆண் போதைப்பொருள் கடத்துவதற்கு பெண்ணுக்கு உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.