ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நம்பிக்கை
ரணில் விக்கிரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில், உள்ளூர் அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்
இந்த நிலையில், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், ரணில் விக்கிரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ரணில் தொடர்பில் தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்," எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கைது குறித்து கருத்து தெரிவித்த பல அரசியல் தலைவர்களில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் ஒருவராவார்.
அதுமட்டுமல்லாது ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது, நஷீட் அவருக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார் .
ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக இருந்தபோது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனையடுட்து , நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.