விபத்தில் இறந்த காதலர்களுக்கு நடந்த திருமணம்; சமூக வலைத்தளங்களில் வைரல்
விபத்தில் இறந்த காதலர்களுக்கு உறவினர்கள் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விபத்தில் இறந்த காதலர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மலேசியாவை சேர்ந்த ஜிங்ஷன் என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த லீ என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். ஜிங்ஷன் கடந்த மாதம் 2 ஆம் திகதி தனது காதலியுடன் பேங்கொக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தஹார்.
இவர் தனது காதலியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி வடமேற்கு மலேசியாவில் பேராக் பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஜிங்ஷன்- லீ சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், விபத்தில் அவர்கள் மரணம் அடைந்தது இருவரின் குடும்பத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விபத்தில் இறந்த ஜிங்ஷன்- லீயின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, லீ- ஜிங்ஷன் இருவரையும் மறுமையில் ஒன்றிணைக்கும் வகையில் பேய் திருமணம் என்ற சடங்கை நடத்தி உள்ளனர்.
இதன்படி ஒரு மண்டபத்தில் இறந்த தம்பதியின் புகைப்படத்தை வைத்திருந்தனர்.
அதில் ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமண சடங்கு நடத்தி உள்ளனர்.
அதுதொடர்பான புகைப்படங்கள், மற்றும் காணொளிக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது