விஜய் ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் ; ஜோதிடர்கள் கூறுவது என்ன!
விஜய் ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் இருபதனால் அவரிடம் இருக்கக்கூடிய தனித்தன்மையான வசீகரமான தோற்றம் மற்றும் ஆளுமை திறன் பிறரை கவர்ந்திருக்கும் விதமாக உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜோதிடத்தின் படி பல கிரகங்கள் ஒன்று சேர்வது ராஜயோகங்களை உருவாக்கும் என கூறப்படுகின்றது. அப்படி பஞ்சமாக புருஷ ராஜ யோகங்களில் முக்கியமானதாக கருதப்படுவது மாளவ்ய யோகம். சுக்கிர பகவான் மிகவும் வலுவாக இருக்கும் போது ஏற்படக்கூடிய யோகம் தான் இந்த மாளவ்ய ராஜயோகம்.

பஞ்சமாக புருஷ ராஜ யோகங்களில் முக்கியமானது
சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்று சொல்வார்கள். அப்படி சுக்கிரன் தனது சொந்த ராசியிலோ அல்லது உச்ச ராசியிலோ அல்லது மூலத் திரிகோண ராசியில் அமர்ந்திருந்தாலோ அல்லது கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பின் பஞ்சமாக புருஷ ராஜ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் உருவாகிறது.
அதேசமயம் ஒருவருடைய ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் இருக்கும் பட்சத்தில், அவர் குடும்பத்தின் ஆதரவு இல்லாவிட்டாலும் சரி, தனியாகவே பல சாதனைகளைப் படைக்கக்கூடியவராக இருப்பார்.

மேலும் அவர் முயற்சியால் மன்னனாகவோ அல்லது உயர்ந்த பதவி வகிப்பவராகவோ, அவரை உயர்த்துவதில் கிரகங்களும் முக்கிய பங்கு வகிக்கும். கிரகங்கள் எந்த அளவிற்கு ராஜயோகத்தை தருகின்றனவோ, அதே அளவிற்கு சில யோகங்கள் பறித்துக் கொள்ளவும் செய்யும்.
சுக்கிரன் லக்னத்தில் இருந்து கேந்திர ஸ்தானத்திலோ (அதாவது 1, 4, 7 அல்லது 10-ஆம் வீடுகளில்) அல்லது தனது சொந்த ராசியிலோ அல்லது மூலத் திரிகோணம் / உச்ச ராசியில் இருப்பின் 'மாளவ்ய யோகம்' உருவாகிறது.
எடுத்த முயற்சி வெற்றியடைய யோகம் சாதகமானதாக இருக்கும்
அப்படி தான் விஜய்யின் ஜாதகத்தில் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் இந்த யோகத்தின் அருளைப் பெறுகிறார். ஆனாலும் மற்ற கிரக நிலையை பொறுத்தே அவர் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.
ஆனால் அவர் எடுத்த முயற்சி வெற்றியடைய இந்த யோகம் சாதகமானதாக இருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பவராகவும், பொருளாதார ரீதியாக நிலை பெற்றவராக இருப்பார். அது மட்டும் இல்லாமல் அறிவுக்கூர்மையும், கல்வி, ஆராய்ச்சி போன்ற தங்களுடைய செயல்பாடுகளால் புகழ் பெற்று, ஆளுமை திறன் கொண்டவராக இருப்பார்.

அவரிடம் இருக்கக்கூடிய தனித்தன்மையான வசீகரமான தோற்றம் மற்றும் ஆளுமை திறன் பிறரை கவர்ந்திருக்கும் விதமாக இருக்கும். அதை தாண்டி இவரிடம் நற்பண்புகள் நிறைந்தும், வசதி மிக்கவராகவும், அதிர்ஷ்டசாலியாகவும், செழிப்பனவராகவும் இருப்பார்.
மீன ராசி சுக்கிரன் உச்சம் பெரும்போதும், ரிஷபம், துலாமில் ஆட்சி பெற்று இருக்கும் பொழுது பெரிய அளவில் நற்பலன்களை தருவார் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.