உலக அளவில் கவனத்தை ஈர்த்த மலாலா திருமணம்; மணமகன் இவரா?
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவரும், மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்று உலக அளவில் பிரபலம் அடைந்தவருமான 24 வயதான மலாலா யூசுப் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவருடைய திருமணத்துக்கு உலக அளவில் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதேவேளை மலாலா திருமணம் செய்துகொண்ட செய்தி உலக அளவில் முக்கிய செய்தியாக இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் பிறந்த வளர்ந்த நிலையிலும் மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கொண்டவராக மலாலா இருந்துவருகிறார் .
இதன்காரணமாக அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. திருமணம் குறித்து மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்த மலாலா, தனக்கும் அம்மாவுக்கு கருத்து முரண்பாடுகள் வருவதாக சமீபத்தில் வோக் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் மலாலாவின் திருமணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் யாரை திருமணம் செய்திருக்கிறார் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்நிலையில் மலாலாவின் கணவர் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மலாலாவைத் திருமணம் செய்துகொண்டிருப்பவர், அசெர் மாலிக். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளராக இருந்து வருகின்றார்.
அதற்கு முன்பு அவர் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரம் உள்ளிட்டவற்றை ஒப்பந்தம் செய்துதரும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார்.
அதோடு அவர் இந்தியாவின் ஐ.பி.எல் போல பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீகில் முல்தான் அணியை நிர்வகித்து வந்தவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் செல்வாக்குள்ள புள்ளியாகவும் மலாலாவின் கணவர் அறியப்படுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இவருக்கும் மலாலாவுக்கும் அறிமுகம் என்றாலும், இந்தத் திருமணம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து நடத்தியது எனவும் தெரிகிறது. இவர்களின் திருமணம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இஸ்லாமிய முறைப்படி எளிமையாகத் நடைபெற்றது.
திருமண நிகழ்வில் குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். திருமணம் முடிந்தபின்னர் சமூக வலைதளங்கள் மூலமாக இதை அறிவித்தார் மலாலா. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள மலாலா,

இன்று என் வாழ்வில் மிகவும் பொன்னான நாள். வாழ்க்கையில் இணையராக இருக்க நானும் அசரும் திருமணம் செய்துகொண்டோம். பர்மிங்காமில் எங்கள் குடும்ப நபர்கள் உடன் மிக எளிய முறையில் எங்கள் நிக்கா( திருமணம்) நடைபெற்றது. உங்களின் பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்புங்கள். எதிர்வரும் பயணத்தில் ஒன்றாக பயணிக்க ஆர்வமுடம் உள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மலாலா- அசர் தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி
திருமண பந்தத்தில் இணைந்த நோபல் பரிசுபெற்ற மலாலா!