இலங்கையில் அவசமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்; காரணம் இதுதான்!
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK - 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
நேற்று (20) இரவு இந்த அவசரத் தரையிறக்கம் இடம்பெற்றதா விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு
விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின், அந்தப் பயணி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான இந்த A380 வகை விமானம் நேற்று இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.