இந்த ஒரு செடியின் இலையில் இத்தனை நன்மைகளா?
தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலையில் சிறுவர் முதல் பெரியவர் எல்லோருக்கும் சலி இருமல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த பிரச்சினையிலிந்து விடுபடுவதற்காக கற்பூரவள்ளியை பயன்படுத்துகின்றோம்
இந்த பிரச்சிணைக்கு மட்டுமல்லாது வேறு எவ்வாறான பிரச்சினைகளுக்கு எல்லாம் கற்பூரவள்ளி உதவுகிறது என்று நாம் இங்கு பார்போம்.
சளி மற்றும் இருமல் நீங்கும்
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தோலில் நுண்கிருமி தொற்று நீங்கும்
நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
சுவாச பிரச்சனை நீங்கும்
சுவாச பிரச்சனைகள் மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
மார்புச்சளி குணமடையும்
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாறநேரிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
அஜீரண கோளாறுகள் நீங்கும்
சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.
சிறுநீரக பிரச்சினை நீங்கும்
சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் குறைவடையும்
கற்பூரவள்ளி இலையிலுள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. தினமும் கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கற்பூரவள்ளி இலை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.