இலங்கை தமிழரசுகட்சி மட்டக்களப்பில் ஆட்சியமைத்தால் யார் மேயர்?
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் இம்முறை இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் , மட்டக்களப்பு மேயர் என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
ஆயுட்கால உறுப்பினரும் சென்ற முறை 2018 வெற்றி பெற்று மாநகர முதல்வராக வருவதற்கு போட்டி போட்டு மூத்த உறுப்பினர் தவராஜா ஐயா அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று விட்டு கொடுப்புடன் செயற்பட்டவருமான ஆங்கில பத்திரிகையாளரும் வர்த்தசங்க உருப்பினருமான சிவம் பாக்கியநாதனா,
அல்லது ஆயுட்கால உறுப்பினரும் 2018 ஆண்டு அதிகூடி விருப்பு வாக்கு பெற்றவரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளரும் இளம்சமூதாயத்தை ஒருங்கிணைத்து பல தேசியவீர வீரங்கனைகளை உறுவாக்கியவருமான மதன் ,
அல்லது ஆயுட்கால உறுப்பினரும் சென்ற 2018 ஆண்டு மாநகரசபை உறுப்பினராக இருந்த மின்சாரசபை உழியருமான சமயபணிகளில் தன்னை ஈடுபடுத்தி சமூக சேவைகளை செய்யும் ரகுநாதன் இவர்கள் மூன்று பேரும் தமிழ்தேசியத்தின் பால் பற்றுடன் சமூகத்தில் செயற்படுபவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் ஆனால் இங்குதான் சத்தேகம் ஏற்படுகின்றது .
தற்காலத்தில் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்கின்ற சுத்துமாத்து அணியானது தமிழ் தேசியவாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்காது தங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களை முன்னுரிமை படுத்தி தேசியவாதிகளை ஓரம் கட்டுவார்களா ?.