யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவையை நியமிப்பதில் பெரும் இழுபறி

Anura Kumara Dissanayaka Eastern University of Sri Lanka University of Jaffna
By Sahana Feb 28, 2025 09:50 PM GMT
Sahana

Sahana

Report

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியல் அழுத்தம் காரணமாகப் பெரும் இழுபறி நிலை தோன்றியிருப்பதாக அறியவருகிறது.

நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் வீழ்ச்சி

நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் வீழ்ச்சி

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் - கடந்த 13ஆம் திகதியுடன் செயற்படும் வகையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பதவியில் இருந்த வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன கோரியிருந்தார்.

இதனையடுத்து, வவுனியாப் பல்கலைக்கழகம் தவிர்ந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவைகள் செயற்பட முடியாமல் முடங்கிப் போயிருந்தன.

பல்கலைக்கழகங்களின் நாளாந்த நடவடிக்கைகள் தவிர, நேர்முகத் தேர்வுகள், நியமனங்கள், திட்ட அங்கீகாரங்கள் உட்பட எந்தவொரு தீர்மானங்களும் இயற்றப்பட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 24 ஆம் திகதி தென்.கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவையை நியமிப்பதில் பெரும் இழுபறி | Major Delay Appointing Councils Jaffna Universitie

சமகாலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவைகளுக்கும் உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயாராக இருந்த போதிலும், வழமை போன்று - முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்றது போல, கடைசி நேர அரசியல் அழுத்தம் காரணமாக பேரவை உறுப்பினர் நியமனம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்கள் இரண்டு தடவைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னரும் கூடப் பட்டியலை வெளியிட முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்டதாரியாக இருத்தல் வேண்டும் அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியுடன்,

பால்நிலை சமத்துவம், சமய ரீதியான பிரதிநிதித்துவத்துடன், சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனையுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்ற வரையறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும்,

ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகளின் சிபார்சின் அடிப்படையிலேயே இதுவரை காலமும் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்று வந்துள்ளமையும், யாழ்பாணத்தில் மிக நீண்டகாலமாக அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் நியமனங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

இலங்கை மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US