இலங்கை மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
மின்சாரம் வழங்கப்படும் போது நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டியைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய, இலங்கை மத்திய வங்கியினால் செலுத்தப்படும் 11.67 வீத வட்டியை மின்சார நுகர்வோருக்குச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை சட்டத்துக்கு அமையப் பெறப்படும் வட்டியை நுகர்வோருக்கு செலுத்துமாறுக்கோரி மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பாவனையாளர் சங்கத்தின் தலைவர் மகேஷ பண்டார இலங்கசிங்க மற்றும் செயலாளர் பிரசாத் பாதியா அமரகோன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொதுப்பயன்பாடு ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.