ஐரோப்பா அனுப்புவதாக கம்போடியாவில் கைவிடப்பட்ட யாழ்ப்பாண யுவதி ; வைத்தியர்களான தம்பதியின் மோசடி
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததாக வைத்திய தம்பதி மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பா அனுப்புவதாக , தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக கைவிட்டு சென்றுள்ளதாகவும் வைத்தியர்களான தம்பதியினர் மீது பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார் .

சகோதரியை மீட்டு தர உதவுமாறு முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் முதல் கட்டமாக 30 இலட்ச ரூபாயை வைத்திய தம்பதியினர் பெற்றுள்ளனர்.
பின்னர் அவரை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த முகவர் ஒருவரை தொடர்பு படுத்தியுள்ளார், அவர் கம்போடியா ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி , கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்து, அவர்களை அங்கே அநாதரவாக கைவிட்டுள்ளனர்.
தற்போது கம்போடியா நாட்டில் அநாதரவான நிலையில் உள்ள தனது சகோதரியை மீட்டு தர உதவுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ், பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை தனது சகோதரியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , 30 இலட்ச ரூபாய் மோசடி செய்த வைத்திய தம்பதியினர் மீதும் , பாதிக்கப்பட்டவரின் சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.