கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ; பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில்
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தோலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய அதன் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு சிறிய பிள்ளையும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முச்சக்கர வண்டியைப் தந்தையே ஓட்டிச் சென்றுள்ளார்.
விபத்தில் காயமடைந்த தந்தையும் அவரது பிள்ளையும் வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்தியமையே இந்த விபத்துக்குக் காரணம் என வரகாபொல பொலிஸார் தெரிவித்தனர்.