இந்தியாபோல் மாறிய இலங்கை ; கள்ளச் சாராயத்தால் ஐவர் பலி
வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் உடலங்கள் வைக்கல பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் - பெண் கைது
இவர்கள் அனைவரும் சட்டவிரோத மதுபானம் அருந்தியமையாலேயே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை இந்தியாவிலேயே கள்ள சாராய உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படும் நிலையில் , இலங்கையிலும் கள்ளச்சாராயத்தால் ஐவர் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.