ரணில் அமைச்சரவையில் இணையும் சஜித் தரப்பின் முக்கிய புள்ளி!
இலங்கையில் சில வாரங்களில் மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் எனக்கு அமைச்சு பதவி கொடுத்து அதில் அமரச் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Genashan) தெரிவித்துள்ளார்.
நாளைக்கே என்றாலும் என்னால் அமைச்சுப் பதவியில் அமர முடியும், ஆனால் நான் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய சபை என்றால் நாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, நல்ல விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும்.
ஆனால் அதனை பயன்படுத்த அரசாங்கம் தவறுமானால் அதோ கதிதான் எனவும் அவர் தெரிவித்தார்.