மஹிந்தவின் மனைவி ஷிரந்தியிடம் விசாரணை ; ஆட்டம்காட்டும் அனுர அரசாங்கம்!

Sulokshi
Report this article
இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை சி.ஐ.டி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணி ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை
இம்புல்கொடை மற்றும் களனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் தான் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும் சம்பந்தப்பட்ட காணி கோவிலுக்குச் சொந்தமானது அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த காணி மஹிந்த ராஜபக்ஷ ஆன்மீக அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்த காணி 500,000 ரூபாவுக்கு வாங்கப்பட்டு 10 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த காணியின் உரிமையாளர் தங்காலை கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆவார்.
இஹல இம்புல்கோடவில் உள்ள மற்றொரு காணி ஒரு மில்லியன் ரூபாவுக்கு வாங்கி பின்னர் 12 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது," என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த காணி ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு நான் சிஐடியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், களனியில் உள்ள ஒரு காணிக்கு சென்றபோது நடந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டதாகவும் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.