கொழும்புக்கு வர தயாராகும் மகிந்த ; இளைஞர்களிடம் விடுத்த கோரிக்கை
தற்போது கால்டனில் வசித்தாலும், தேவை ஏற்படும் பட்சத்தில் கொழும்புக்கு விரைந்து வர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தம் மீதான விமர்சனங்கள் தொடர்பாக கவலையடைய தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியில் செயல்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும்
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து கால்டன் இல்லத்தை சென்றடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனியார் ஊடகமொன்று நடத்திய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, அரசியல், பொருளாதாரம், யுத்த வெற்றி உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றிய கருத்துக்களை அவர் தெரிவித்தார். விரைவில் நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எனவே, இளைஞர்கள் முறையற்ற செயல்களில் ஈடுபடாமல், ஜனநாயக ரீதியில் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.