மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் செய்த செயல் அம்பலம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21-10-2022) 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.
வருகை தராத எம்.பி.க்களில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான எம்.பி.க்கள் இருந்தனர்.
வருகை தராத நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, காமினி லோககே, ரோஹித அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஏனைய சபை உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதற்கிடையில், குழு அமர்வின் பின்னர், மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், 22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 173 வாக்குகள் பதிவாகின.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) மாத்திரமே எதிராக வாக்களித்துள்ளார்.