பிரதமர் மஹிந்தவின் பதவி விலகியதாக போலிச் செய்தி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaska) தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென சொல்லப்படுகிறது.
அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக சொல்லப்பட்டது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனும் செய்தியை பிரதமர் ஊடகப்பிரிவு மறுப்பு
பிரதமர் பதவி விலகும் செய்தியில் உண்மை இல்லை - பிரதமர் அலுவலகம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயாராக இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என சில வட்டாரங்கள் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் கூறியுள்ள போதிலும், பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெவிவிட்ட பிரதமர் பதவி விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
BREAKING - Prime Minister Mahinda Rajapaksa has tendered his resignation to President Gotabaya Rajapaksa, to ensure immediate political stability within the government and parties, to take the country fwd.
— Jamila Husain (@Jamz5251) April 3, 2022
President is however YET TO ACCEPT IT! #SriLanka #SriLankaCrisis