மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் இன்று (பிப்ரவரி 13) துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் மூன்று இலட்சம் ரூபா குடிநீர் கட்டணம் செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று இலட்சம் ரூபா குடிநீர் கட்டணம் நிலுவை
குறித்த உத்தியோகபூர்வ வீட்டை அரசாங்கத்திடம் கையளித்து காலி செய்யுமாறு அரசாங்கத்தின் பலமானவர்கள் பல சந்தர்ப்பங்களில் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த உத்தியோகபூர்வ இல்லம் அரசியலமைப்பு ரீதியாக தமக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை விட்டு வெளியேறுமாறு எழுத்துமூல அறிவித்தல் வழங்க வேண்டும் என்பதே மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால், அத்தகைய எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட அனுர அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.