மீண்டும் ஹீரோவான மஹிந்த ; ஆசி பெற படையெடுக்கும் மக்கள் கூட்டம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை வௌியேறி தங்காலையில் உள்ள அவரது கார்ல்டன் இல்லத்திற்கு இடம்பெயர்ந்தார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மகிந்தவின் தங்காலையிலுள்ள இல்லத்திற்கு பெரும் திரளான மக்கள் வருகை தந்து முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கால்களில் விழுந்து ஆசிர்வாதம்
அத்துடன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று செல்வதுடன், நாட்டை காப்பாற்றிய மகிந்த மீது நாம் அன்பு செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி தென்னிலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வருகை தந்து மகிந்தவை குசலம் விசாரித்து செல்கின்றமை குறிப்பிடதக்கது.
இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.